13th of January 2015
சென்னை:தமிழ் சினிமாவின் நட்சத்திர அணியான சென்னை ரைனோஸ் முதல் இரண்டு வருடத்தில் கோப்பையை கைப்பற்றியது, அடுத்த இரண்டு வருடத்தில் தோல்வியை தழுவியுள்ளது, இம்முறை கேப்டனாக ஜீவா நியமிக்கப்படுள்ளார். அவரது தலைமையில் இந்த வருடம் களமிறங்கியுள்ள சென்னை ரைனோஸ் முதல் ஆட்டத்திலேயே அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்திய சினிமா நட்சத்திரங்கள் அனைவரும் ஒன்று திரட்டு விளையாடி வருன் இந்த சிசிஎல்லின் ஐந்தாவது சீசன் இன்று முதல் ஆரம்பமானது, முதல் ஆட்டத்தில் சென்னை அணி, கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியுடன் மோதியது. முதலில் பேட் செய்த சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20வது ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 148 ரன் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக நடிகர் சாந்தனு 52 ரன்களை சேர்த்தார்.
இதை தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கேரளா அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் சென்னை அணி 59 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 52 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகளை எடுத்த சாந்தனுவிற்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
ஓப்பனிங்கெல்லாம் நல்லாத்தான் இருக்கு..பினிசிங்தான் எப்படி இருக்கும்னு தெரியல…..
Comments
Post a Comment