சூர்யா பெயரில் மோசடி: சைபர் கிரைம் போலீஸில் புகார்!!!

22nd of January 2015
சென்னை:சூர்யா பெயரில் பேஸ்புக்கில் பக்கம் திறக்கப்பட்டதாக செய்திகள் வந்தது. இது சூர்யாவின் பக்கம்தான் என்று எண்ணி பல்வேறு ரசிகர்களும் அந்த பக்கத்தை லைக் செய்தனர்.
 
ஆனால் சூர்யா இது தனது பேஸ்புக்பக்கம் கிடையாது என்றும் தன் பெயரில் சிலர் போலியாக கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட்டு வருவதாக புகார் கூறியுள்ளார். இதுகுறித்து சூர்யா தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “சில மணி நேரத்துக்கு முன்புதான் பேஸ்புக்கில் நடிகர் சூர்யா என்ற பெயரில் ஒரு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது கவனத்துக்கு வந்தது. இது உண்மையான அதிகாரப்பூர்வமான பக்கம் என நம்பி பலரும் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர். இது போலியான பக்கமாகும்.

நடிகர் சூர்யாவுக்கும் இந்த பேஸ்புக் பக்கத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. யாரோ சிலர் வேண்டுமென்றே உருவாக்கியுள்ளனர். இது குறித்து சைபர் க்ரைமில் புகார் தெரிவிக்கவிருக்கிறோம். ட்விட்டர், பேஸ்புக் என எந்த சமூக வலைத் தளத்திலும் சூர்யா இல்லை. அப்படி அவர் இணைந்தால் அது குறித்து முறையாகத் தெரிவிப்போம்,” என்று குறிப்பிட்டுள்ளனர்.
 
மேலும், சம்பந்தப்பட்ட பக்கத்தை தொடங்கியவர் மீது சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Comments