நானும் ரௌடி தான்’ முதல் ஷெட்யூல் முடிந்தது!!!

4th of January 2015
சென்னை:தயாரிப்பாளராக தனுஷ், ஜோடிப்புறாக்களாக விஜய்சேதுபதி, நயன்தாரா என வித்தியாசமான கூட்டணியை ஒன்றிணைத்து ‘நானும் ரௌடி தான்’ படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.. இவர்தான் சிம்பு நடித்த ‘போடா போடி’யை இயக்கியவர். அனிருத் இந்தப்படத்திற்கு இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.

இதுவரை கதைக்காக வயதான வேடத்தில் கூட நடித்துவந்த விஜய்சேதுபதி இந்தப்படத்தில் பக்கத்துவீட்டு பையன் போல படு யூத்தாக மாடர்ன் கெட்டப்பில் நடித்துவருகிறார். கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் நடைபெற்று வந்த இந்தப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது என டிவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார் இயக்குனர்  விக்னேஷ் சிவன்.

Comments