லட்சிய பயணத்துக்கு வழி சொல்லும் ராதாமோகனின் ‘உப்பு கருவாடு!!!

18th of January 2015
சென்னை:பொதுவாக ராதாமோகனின் படங்கள் உணர்வியல் ரீதியாகவும் அதே சமயம் நகைச்சுவையுடனும் இருக்கும். அவர் தற்போது இயக்கம் ‘உப்பு கருவாடு’ படமும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதே சமயம் உன்னதமான ஒரு கருத்தையும் சொல்ல இருக்கிறது.   நகைச்சுவை நடிகராக முன்னேறிக் கொண்டிருக்கும் கருனாகரனும் அவருக்கு ஜோடியாக ‘அட்டகத்தி’, ‘முண்டசுப்பட்டி’ புகழ் நந்திதாவும்  நடிக்கிறார்கள்.

ஒருவருடைய லட்சியத்துக்கும், அந்த லட்சிய பயணத்தை தொடர விடாமல் சிறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது லட்சியம் உள்ளவர்கள் அதில் சமரசம் ஆகி விடக் கூடாது. இந்த சமரசமே நம்மை லட்சிய பயணம் மேற்கொள்ள விடாமல் தடுக்கும் நமக்குள்  நாமே மேற்கொள்ளும் சமரசத்துக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இந்தப்படத்தின் கதை…
 
பிரபல கிட்டார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் இசை அமைப்பாளராக  இந்த படத்தில் அறிமுகமாகிறார். பிரபல நடன அமைப்பாளர் சதீஷ் நடனம் அமைக்கும் பணியுடன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். வசனத்தை பார்த்திபன் எழுதுகிறார். கடல் சார்ந்த பகுதிகளில் முழுவதுமாக படமாக்கப்படும் இந்த ‘உப்பு கருவாடு’ அந்த மனிதர்களின் வாழ்கை முறையை  சித்தரிக்கும் படமாக இருக்குமாம்.

Comments