25th of January 2015
சென்னை:இந்து மதத்திற்கு மாற வேண்டும் என்று பிரபல பாலிவுட் நடிகர்களான ஷாரூக் கான், அமீர் கான், சயீஃப் அலி கான் ஆகியோரை இந்து மகாசபா வலியுறுத்தியுள்ளது.
இந்து மதத்திற்கு ஆதரவாக செயல்பட்டுவரும் பத்திரிகையான 'இந்து சபா வார்த்தா'வில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் "ஷாரூக் கான், அமீர் கான், சயீஃப் அலி கான் ஆகியோர் உண்மையில் தங்கள் மனைவியை நேசிப்பவர்களாக இருந்தால் இந்து மதத்தைத் தழுவ வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
ஷாரூக் கானின் மனைவி கௌரி கான், அமீர் கான் மனைவி கிரண் ராவ், சயீஃப் அலி கான் மனைவி கரீனா கபூர். இவர்கள் தவிர ஃபர்தீன் கான், இம்ரன் ஹஷ்மி ஆகியோரும் இந்து மதத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொண்டுள்ளதால் அவர்களையும் தனது பட்டியலில் சேர்த்துள்ளது.
இது தொடர்பாக அந்த பத்திரிகையின் ஆசிரியர் முன்னா குமார் சிங் கூறுகையில், "இது பாலிவுட்டின் கான் நடிகர்களுக்கு எங்களது சவால் ஆகும். இவர்கள் உண்மையில் தங்கள் மனைவியை நேசிப்பவர்களானால் அவர்கள் இந்து மதத்திற்கு மாற வேண்டும்” என்றார்.
மேலும் அவர், “இந்துக்களுக்கும் இந்து நாட்டுக்கும் எதிராக சதி நடந்து வருகிறது. நடிகைகள் ஷர்மிளா தாகூர், கரீனா கபூர், கௌரி, கிரண் ராவ், ரீனா தத், கவுரி சிப்பர் ஆகியோரை முன்னா குமார் சிங், ‘லவ் ஜிஹாதியால் பாதிக்கப்பட்டவர்கள்’ என்று அழைத்தார்.
Comments
Post a Comment