1st of January 2015
சென்னை:சினிமாவிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் நடிகர் விக்ரம் என்று சொல்லலாம்.
சென்னை:சினிமாவிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் நடிகர் விக்ரம் என்று சொல்லலாம்.
சேது, பிதாமகன், காசி, அந்நியன், தெய்வத்திருமகள் என அவரது முந்தைய படங்களில் வித்தியாசமாக நடித்திருந்தாலும் இப்போது அவர் நடித்துள்ள ஐ படம், அவரது நடிப்பு திறனை இன்னும் உயரத்திற்கு கொண்டு போய் சென்றுள்ளது.
கிட்டத்தட்ட 3 வருடமாக இப்படத்திற்காக கஷ்டப்பட்டு உழைத்துள்ளார். மாடலிங், பாடி பில்டர், கூன் விழுந்த கேரக்டர், மிருக மனிதன் என 4 ரோல்களில் வித்தியாசம் காட்டியுள்ளார்.
ஐ படம் தமி்ழ் சினிமா வரலாற்றில் இல்லை இல்லை... இந்திய சினிமா வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல் என்று சொல்லலாம், அந்தளவுக்கு இந்தப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சல்மான் கான் நடத்தி வரும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் பங்கேற்றார். அப்போது பேசிய விக்ரம், ஐ படத்தின் ஒவ்வொரு ரோலுக்கும் ரொம்பவே கஷ்டப்பட்டேன்.
பாடி பில்டிங் ரோலுக்காக உடல் எடையை அதிகரிக்க மிகவும் சிரமப்பட்டேன். அதேப்போல் மிருகம் மற்றும் கூன் விழுந்த ரோலுக்கு 3 முதல் 5 மணி நேரம் வரை மேக்கப் போட வேண்டியிருந்தது.
இப்படத்திற்காக உடல் எடையை திடீரென அதிகரித்து, பின்னர் அதே அளவுக்கு குறைத்ததை பார்த்துவிட்டு, என் குடும்பத்தில் உள்ளவர்கள் பயந்து விட்டார்கள். இந்தளவுக்கு ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்றார்கள். பின்னர் நான் தான் அவர்களை சமாதானம் செய்தேன்.
ஐ படம் ஒரு நடிகனாக என்னை இன்னும் ஒருபடி உயர்த்தியுள்ளது. இந்தமாதிரி ஒரு படத்தில் நடிக்க நான் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளேன்.
Comments
Post a Comment