மலையாள இயக்குனர் பிளெஸ்ஸியின் இயக்கத்தில் நடிக்கும் விக்ரம்...?!!!

23rd of January 2015
சென்னை:சேதுவுக்கு முன்பு விக்ரமுக்கு அடைக்கலம் தந்தது மலையாள சினிமா. பல மம்முட்டி, சுரேஷ்கோபி படங்களில் அவர்களுக்கு உதவி செய்யும் சின்ன கதாபாத்திரங்களில் விக்ரம் நடித்திருக்கிறார். தமிழில் ஸ்டாரான பிறகு மலையாளத்தில் நடிக்க வேண்டும் என்பது விக்ரமின் நெடுநாளைய ஆசை.

விரைவில் அவர் மலையாள இயக்குனர் பிளெஸ்ஸியின் இயக்கத்தில் நடிப்பார் என்று ஒரு தகவல் உலவுகிறது.


மம்முட்டியை வைத்து காழ்ச்சா படத்தை எடுத்ததன் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானவர் பிளெஸ்ஸி. காழ்ச்சா சூப்பர்ஹிட்டானது. அதன் ரீமேக்கில் நடிக்க விக்ரம் ஆசைப்பட்டு, அது நடக்காமல் போனது.

பிளெஸ்ஸியின் இரண்டாவது படம் தன்மாத்ரா, மோகன்லால் நடித்தது. அதுவும் பணத்தையும், விருதையும் குவித்தது. ஆனால் அதற்குப் பிறகு அவரது எந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. பிளெஸ்ஸி சோகத்தை கொண்டாடுவதும் ஒரு காரணம்.

பிளெஸ்ஸியின் இயக்கத்தில் விக்ரம் நடித்தால் அது அவரது கரியரில் வித்தியாசமான படமாக இருக்க வாய்ப்புள்ளது.

Comments