ரஜினியை அடுத்து அஜித்துக்கு தான் அதிகம்!!!

22nd of January 2015
சென்னை:அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வரும் 29ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படம் நேற்று அமாவாசை தினத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இந்த படத்தை நாளை சென்சார் அதிகாரிகள் பார்த்து சான்றிதழ் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் வியாபாரம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. வெளிநாடுகளிலும் ‘என்னை அறிந்தால்’ படத்தை அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி பிரான்ஸ் நாட்டில் இதுவரை 30 தியேட்டர்களுக்கு மேல் புக் செய்யப்பட்டுள்ளது.
 
பிரான்ஸ் நாட்டில் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லிங்கா’ படம் மட்டுமே அதிகபட்சமாக 53 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. தற்போது இரண்டாவது இடத்தை அஜீத்தின் ‘என்னை அறிந்தால்’ பிடித்துள்ளது. பிரான்ஸ் நாட்டில் விஜய்யின் ‘கத்தி’ படம் 24 தியேட்டர்களிலும், ஷங்கரின் ‘ஐ’ மற்றும் விஜய்யின் ‘ஜில்லா’ ஆகிய திரைப்படங்கள் 23 தியேட்டர்களிலும், அஜீத்தின் வீரம் 10 தியேட்டர்களிலும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
 
தொடர் வெற்றிகளை அஜித் கொடுத்து வருவதால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு யானை அளவு இருக்கிறது, பூனை அளவாவது வெற்றி பெறும் என்று நம்பலாமா….

Comments