24th of January 2015
சென்னை:அண்மையில் வெளிவந்த 'ஆம்பள', சங்கரின் 'ஐ' அளவுக்கு வசூல் சாதனை புரியாவிட்டாலும் வெற்றிப் படம்தான் என்கிறார்கள்.
சென்னை:அண்மையில் வெளிவந்த 'ஆம்பள', சங்கரின் 'ஐ' அளவுக்கு வசூல் சாதனை புரியாவிட்டாலும் வெற்றிப் படம்தான் என்கிறார்கள்.
அதிலும் படத்தின் செயற்கைக்கோள் உரிமையே பத்து கோடிக்கு விலை போயிருக்கிறதாம். ஆனால், 'ஆம்பள' படத்தின் நிலைமை?
படத்தில் சந்தானத்தின் பகுதியை உருவிவிட்டால் மிச்சமிருக்கும் ஈர்ப்புக்குரிய அம்சங்கள் என்ன? இதில் இயக்குநரின் யுக்தி எங்கே உள்ளது?
இப்படியெல்லாம் பல்வேறு கணக்குகளை கூட்டிக் கழித்து போட்டுப் பார்த்தாராம் சிவகார்த்திகேயன். அவர் ஏன் இதையெல்லாம் கூட்டிக் கழிக்கவேண்டும் என்கிறீர்களா?
இப்படியெல்லாம் பல்வேறு கணக்குகளை கூட்டிக் கழித்து போட்டுப் பார்த்தாராம் சிவகார்த்திகேயன். அவர் ஏன் இதையெல்லாம் கூட்டிக் கழிக்கவேண்டும் என்கிறீர்களா?
அடுத்து சுந்தர்.சி படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறாரே, அதனால்தான்.
இந்த படத்தை குஷ்புவே தயாரிப்பதாகவும் இருந்தது. இந்த நிலையில்தான் மேற்படி கேள்விகளை தன் மண்டைக்குள் விடாமல் செலுத்தி, ஒரு வழியாக விடையறிந்துவிட்டார் சிவ கார்த்திகேயன்.
பிறகென்ன! சுந்தர்.சியை தயக்கமின்றி அழைத்து, "சார் நம்ம படம் இப்ப இல்ல. பிறகு பார்க்கலாம்," என்று கூறிவிட்டதாகத் தகவல். இந்த பேரதிர்ச்சியிலிருந்து சுந்தர்.சி சுலபமாக மீள்வார். ஏனென்றால் அவர் பார்க்காத நாயகர்களா, நகைச்சுவை நடிகர்களா?
Comments
Post a Comment