'என்னை அறிந்தால்' தள்ளிப்போனதற்கு காரணம் தனுஷா? பரபரப்பு தகவல்!!!

8th of January 2015
சென்னை:கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ’என்னை அறிந்தால்’ படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் திடீரென என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை ஜனவரி 29ஆம் தேதி தான் ரிலீஸாகிறது என்று தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்பட்டது.

திடீரென படம் தள்ளிப்போனதற்கு பல விதமான காரணங்கள் கோடம்பாக்கத்தை சுற்றிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து இசைக்கோர்ப்பு பணிகள்
மீதம் இருப்பதால் தான் படம் தள்ளிப்போனது என கூறப்பட்டது. 

ஆனால், அப்படி இசைக்கோர்ப்பு பணிகள் மீதம் இருக்க காரணம் தனுஷ் தானாம். ஏனெனில் ’என்னை அறிந்தால்’ படத்திற்கும், ’அனேகன்’ படத்திற்கும் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசை.

இதில் அனேகன் படத்திற்கான வேலையை ஹாரிஸ் ஜெயராஜ் எப்போதே ஆரம்பித்துவிட்டார். ஆனால் இன்னும் முடிக்கவில்லையாம். அதற்குள் என்னை அறிந்தால் படத்திற்குள் இறங்கிவிட்டாராம் ஹாரிஸ்.

இதனால் அனேகன் படத்தை முடித்து கொடுத்து விட்டு, என்னை அறிந்தால் படத்தின் பணியை ஆரம்பியுங்கள் என்று தனுஷ், ஹாரிஸுக்கு நெருக்கடி கொடுத்தாராம்.
 
அதனால் தான் ஹாரிஸால் அஜித் படத்திற்கு கவனம் செலுத்த முடியாமல் வேலைகள் தாமதம் ஆகிறதாம்.

Comments