22nd of January 2015
மேலும், உடம்பை ஏற்றி இறக்க மாதக்கணக்கில் செலவு செய்தேன். அதோடு ஐ படப்பிடிப்பு நடைபெற்றபோது ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் மட்டுமே தூங்கினேன். காரணம், சீனாவில் சில அற்புதமான லொகேஷன்களில் படப்பிடிப்பு நடந்தபோது, தினமும் அதிகாலை 3 மணிக்கே எழுந்து உடற்பயிற்சி செய்வேன்.
அதையடுத்து 5 மணிக்கு லொகேஷனுக்கு கிளம்புவோம். ரயிலில் 2 மணி நேரம் சென்று இறங்கி பின்னர், காரில் 2 மணி நேரம் செல்வோம். அதன்பிறகு கால்நடையாக 1 மணி நேரம் நடந்த பிறகே லொகேஷனை அடைவோம்.
அதனால்,போற வழியிலேயே மேக்கப் போட்டுக்கொள்வோம். பின்னர் படப்பிடிப்பு முடிந்த பிறகு கிட்டத்தட்ட இரவு 12 மணிக்குத்தான் தங்கும் ஹோட்டலுக்கு வந்து சேருவோம்.
ஆனால் அப்படி கஷ்டப்பட்டு நடித்ததற்கு இப்போது படம் வெற்றி பெற்று நல்ல பலனை கொடுத்து விட்டது என்று கூறும் விக்ரம், சீனாவில் லொகேஷன் மேனேஜர்களுக்கே தெரியாத அதாவது இதுவரை சினிமாக்காரர்களின் கால்தடம் பதியாத லொகேஷன்களையெல்லாம் கண்டு பிடித்து படமாக்கினார் ஷங்கர். அது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தது என்கிறார் விக்ரம்.
சென்னை:இந்திய அளவில் 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் முதன்முதலாக தயாரான படம் ஐ. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்த இந்த படத்தில் விக்ரம் - எமிஜாக்சன் நடித்தனர். பொங்கலுக்கு வெளியான அப்படத்தில் தான் பணியாற்றிய அனுபவங்களை இப்போது வெளிப்படையாக பேசி வருகிறார் விக்ரம்.
அதுபற்றி அவர் கூறும்போது,
ஐ படத்திற்கு முன்பு நான் நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததோடு, சில படங்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் பிரச்சினையில் இருந்தது. அப்போதுதான் ஷங்கர் என்னை அழைத்தார்.
அதோடு, 2 மாதங்களுக்கு முன்பே பாடியை ஒர்க் அவுட் பண்ண வேண்டும் என்றும், இனிமேல் இந்த படம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்கக்கூடாது என்றும் கூறினார். அதனால் தினமும் ஜிம்மிற்கு சென்று பாடி பில்டராக என்னை மாற்றி வந்தேன்.
மேலும், உடம்பை ஏற்றி இறக்க மாதக்கணக்கில் செலவு செய்தேன். அதோடு ஐ படப்பிடிப்பு நடைபெற்றபோது ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் மட்டுமே தூங்கினேன். காரணம், சீனாவில் சில அற்புதமான லொகேஷன்களில் படப்பிடிப்பு நடந்தபோது, தினமும் அதிகாலை 3 மணிக்கே எழுந்து உடற்பயிற்சி செய்வேன்.
அதையடுத்து 5 மணிக்கு லொகேஷனுக்கு கிளம்புவோம். ரயிலில் 2 மணி நேரம் சென்று இறங்கி பின்னர், காரில் 2 மணி நேரம் செல்வோம். அதன்பிறகு கால்நடையாக 1 மணி நேரம் நடந்த பிறகே லொகேஷனை அடைவோம்.
அதனால்,போற வழியிலேயே மேக்கப் போட்டுக்கொள்வோம். பின்னர் படப்பிடிப்பு முடிந்த பிறகு கிட்டத்தட்ட இரவு 12 மணிக்குத்தான் தங்கும் ஹோட்டலுக்கு வந்து சேருவோம்.
அப்படி சில மாதங்களாக வெறும் 3 மணி நேரம் மட்டுமே என்னால் தூங்க முடிந்தது. மற்றபடி படப்பிடிப்பில் கேப் கிடைக்கும்போது கால் மணி நேரம், அரை மணி நேரம் என்று கோழித்தூக்கம் தூங்குவேன்.
ஆனால் அப்படி கஷ்டப்பட்டு நடித்ததற்கு இப்போது படம் வெற்றி பெற்று நல்ல பலனை கொடுத்து விட்டது என்று கூறும் விக்ரம், சீனாவில் லொகேஷன் மேனேஜர்களுக்கே தெரியாத அதாவது இதுவரை சினிமாக்காரர்களின் கால்தடம் பதியாத லொகேஷன்களையெல்லாம் கண்டு பிடித்து படமாக்கினார் ஷங்கர். அது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தது என்கிறார் விக்ரம்.
Comments
Post a Comment