'என்னை அறிந்தால்' படம் இரண்டு பேருக்காக ஹிட்டாக வேண்டும்: அஜீத்!!!

20th of January 2015
சென்னை:அஜீத் தான் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் இரண்டு பேருக்காக ஹிட்டாக வேண்டும் என்று நினைக்கிறார்.
 
இந்தியன், ரன், குஷி, பாய்ஸ், கில்லி என பல மெகா படங்களை தயாரித்தவர் ஏ.எம்.ரத்னம்.
ஆனால் கடைசியில் ஒரு இரண்டொரு படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்ததால் பெரும் சரிவை சந்தித்தார்.
 
அந்த நேரத்தில் தனது தயாரிப்பில் நடித்த யாராவது முன்னணி ஹீரோக்கள் தனக்கு கைகொடுக்க மாட்டார்களா? என்று எதிர்பார்த்தார் ஏ.எம்.ரத்னம். ஆனால் யாருமே அவரை கண்டு கொள்ளவில்லை.
இந்த நேரம்தான், அஜீத்திடம் தனது நிலையை சொல்லி அவர் கால்சீட் கேட்டபோது ஆரம்பம் படத்தில் நடித்தார்.

அப்போதும் ஏ.எம்.ரத்னத்தின் கடன் தீரவில்லை என்பதால், மீண்டும் கால்சீட் தருகிறேன் என்று சொல்லி என்னை அறிந்தால் படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தை கெளதம்மேனன் இயக்கியுள்ளார்.

இவரும் ஒரு நேரத்தில் அஜீத்தை வைத்து படம் இயக்க இருந்தவர்தான். பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக அந்த படம் நடக்கவில்லை.
இருப்பினும், இப்போது ஏ.எம்.ரத்னத்தைப்போலவே கெளதம்மேனனும் இக்கட்டான நிலையில் இருப்பதை அறிந்த அஜீத் அவருககும் கைகொடுத்துள்ளார்.

ஆக, என்னை அறிந்தால் படம் மூலம் இரண்டு பேருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நடித்துள்ளார் அஜீத். அதனால் இந்த படம் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். வசூல்ரீதியாகவும் அவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார் அஜீத்.

அதனால்தான் படத்தை பொஙகலுக்கு வெளியிட்டால், வசூல்ரீதியாக பாதிப்பு ஏற்படக்கூடும் என்று ஏ.எம்.ரத்னம் தெரிவித்தபோது, அப்படியென்றால் ஒரு இரண்டு வாரம் கழித்து வெளியிடுவோம்.
நமக்கு வேகம் முக்கியமல்ல விவேகம்தான் முக்கியம் என்றாராம் அஜீத். அதனால்தான், பொங்கலுக்கு வெளியிட தடபுடலாக வேலை செய்து கொண்டிருந்த கெளதம்மேனன், இந்த தகவல் தனக்கு கிடைத்ததும், தனது வேலைகளின் வேகத்தை சற்றே குறைத்துக்கொண்டாராம்.

Comments