10th of January 2015
சென்னை:இதுவரை காமெடி வேடங்களில் மட்டும் நடித்து வரும் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் சகோதரர் பிரேம்ஜி தற்போது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார். அவர் ஹீரோவாக நடிக்கும் ஒரு திரைப்படத்தின் பெயர் "டக்கர்" என்பதாகும்.
இந்த படத்தை மார்க்கெட்டில் பிரபலப்படுத்த பிரபல நடிகர்களை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க இவர் செய்த முயற்சிக்கு தக்க பலன் கிடைத்துள்ளது.
இவருடைய டக்கர் படத்தில் அஜீத், சூர்யா, ஆர்யா, ஜெய் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் ஒரே ஒரு காட்சியில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் அஜீத் பைக் ரேஸராக வருகிறாராம். அஜீத் உண்மையிலேயே பைக் ரேஸர் என்பதால் தல ரசிகர்கள் இதுவரை பார்க்காத அஜீத்தை பார்ப்பார்கள் என்று கூறப்படுகிறது.
சூர்யா, ஆர்யாவின் கேரக்டர்கள் குறித்து விரைவில் அறிவிக்க இருப்பதாக டக்கர் படக்குழுவினர் கூறியுள்ளனர்.
ஒரே படத்தில் அஜீத்,சூர்யா, ஆர்யா, ஜெய் நடிக்கவுள்ளதால் இந்த படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இதற்கு முன்னால் இதேபோல் நட்சத்திரம், உருவங்கள் மாறலாம் ஆகிய படங்களில் சிவாஜி, கமல் ,ரஜினி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னால் இதேபோல் நட்சத்திரம், உருவங்கள் மாறலாம் ஆகிய படங்களில் சிவாஜி, கமல் ,ரஜினி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment