19th of January 2015
சென்னை:சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகிவரும் புலி படத்தை அடுத்து விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தை கலைபுலி எஸ் தாணு தயாரிக்கிறார். அந்த படத்திற்கான கதை விவாதத்தில் கலந்து கொண்ட விஜய் அந்த கேரக்டருக்கு இவரை போடுங்க என சிபாரிசு செய்தாராம்.
அப்படி விஜய் சிபாரிசு செய்த நபர் யார் தெரியுமா தமிழ் சினிமாவிற்கு பாலாவால் வில்லனாக அறிமுகம் செய்யப்பட்டு ராஜேஷ் மற்றும் அட்லீயால் காமெடியனாக காட்டப்பட்ட நான் கடவுள் ராஜேந்திரன் தான். சமீபத்தில் வெளியான திருடன் போலீஸ் படத்தில் இவர் பெண் வேடம் அணிந்து நடித்த கெட்டப்பை பார்த்தவர்கள் வயிறு வலிக்க சிரிக்காமல் இருந்திருக்கவே மாட்டார்கள். அந்த சிரிப்பில் விழந்தவர் தான் விஜய், அதனால் தான் இந்த சிபாரிசு.
அதோடு மட்டுமில்லாமல் இனி என்னுடைய அனைத்து படங்களிலும் அவருக்கு ஒரு கெட்டப் உண்டு என்று கூறியுள்ளார். தெய்வம் கூரை பிச்சுட்டு கொடுக்கும்னு சொல்லுவாங்க இங்க கூரையை பங்களாவா மாத்த போகுது…கலங்குங்க கோஸ்ட் கோபால் வர்மா…
Comments
Post a Comment