18th of January 2015
சென்னை:பாலிவுட்டில் வில்லன், குணசித்ர வேடங்களில் பிரபலமாக பேசப்படுபவர் ஓம் புரி. பல வருடங்களுக்கு முன் ‘ஆஸ்தா‘ இந்தி படத்தில் இவர் மாஜி ஹீரோயின் ரேகாவுடன் இணைந்து நடித்த பெட் ரூம் காட்சிகள் பரபரப்பாக பேசப்பட்டன. நீண்ட இடைவெளிக்கு பிறகு அவர் நடிக்கும் படம் ‘டர்ட்டி பாலிடிக்ஸ்'. இதில் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் நடித்திருக்கிறார்.
இப்படத்துக்காக மல்லிகா தேசிய கொடி மட்டும் உடலில் போர்த்தியபடி கொடுத்த 'போஸ்' பரபரப்பை ஏற்படுத்தியது. ஏழை குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண், தனது அழகை காட்டி அரசியல்வாதிகளை மயக்கி தன் வலையில் விழ வைக்கும் கதாபாத்திரத்தை இதில் ஏற்றிருக்கிறார் மல்லிகா. இப்படத்துக்காக தன்னைவிட வயதில் மூத்த ஓம் புரியுடன் படுக்கை அறை காட்சிகளில் சமீபத்தில் நடித்தார்.
இதுபற்றி மல்லிகாவிடம் கேட்டபோது,‘பல படங்களில் கவர்ச்சியாக நடித்திருக்கிறேன். ஆனால் ஓம்புரியுடன் நெருக்கமாக படுக்கை அறையில் நடிக்கும் காட்சி எனக்கு வசதியாக அமையவில்லை. ஆனாலும் ஓம் புரி என்னிடம் சகஜமாக பேசி தர்மசங்கடமில்லாமல் நடிப்பதற்கான சூழலை ஏற்படுத்தி கொடுத்தார்' என்றார்.
Comments
Post a Comment