இளையராஜா, அமிதாப் பச்சன் இருவரும் தோன்றி பாடும் தேசிய கீதம்!!!

13th of January 2015
சென்னை:நாட்டின் தேசிய கீதமான ஜன கண மண... அடுத்து இளையராஜா இசையில் ஒலிக்கவிருக்கிறது. இளையராஜா, அமிதாப் பச்சன் இருவருமே இந்த கீதத்தை பாடவிருக்கிறார்கள்.
இந்தத் தகவலை இளையராஜாவும் இயக்குநர் பால்கியும் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
 
இயக்குநர் பால்கி கூறுகையில், "நாட்டுக்கு ஒரு பங்களிப்பாக, நமது
தேசிய கீதத்தை இளையராஜா இசையில் பதிவு செய்கிறோம்.
இதில் இளையராஜா, அமிதாப் பச்சன் இருவரும் தோன்றி, இசைக் கலைஞர்களுடன் பாடுவார்கள். பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இதனை ஒளிப்பதிவு செய்கிறோம்.

வரும் ஜனவரி 26-ம் தேதி, குடியரசு தினத்தை முன்னிட்டு, தொலைக்காட்சிகளில் இளையராஜா இசையில் உருவான தேசிய கீதம் ஒளிபரப்பாகும்.

தேசிய கீதத்தின் மெட்டிலோ, உச்சரிப்பு முறையிலோ சிறு மாற்றம் கூட செய்யவில்லை. அதற்கு இளையராஜா உடன்படவும் மாட்டார்.
முழுக்க முழுக்க ஒரிஜினல் மெட்டில், ராஜா சார் பின்னணி இசையில் ஒலிக்கப் போகிறது. அமிதாப் பச்சன், இளையராஜா இருவருமே பாடவிருக்கிறார்கள்.

இளையராஜா, அமிதாப் பச்சன், பிசி ஸ்ரீராம் என மூன்று மேதைகள் இதற்காக ஒன்று சேர்கிறார்கள்.
 
இந்த ஆல்பத்தை பல்லாயிரம் பாடல்கள், இசை தந்த இளையராஜாவின் ஒலிப்பதிவுக் கூடத்துக்குள் படமாக்க வேண்டும் என்பது என் ஆசை," என்றார்.

Comments