13th of January 2015
சென்னை:தமிழ் சினிமாவில் காலடி வைத்த ஒரு சில வருடங்களிலேயே பல ரசிகர்களை தன் பக்கம் திருப்பியவர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான், அவர் ஒன்றும் சினிமாவில் வந்தவுடனே அத்தனை ரசிகர்களை பிடிக்கவில்லை, தொலைக்காட்சியில் ஆறு வருடங்களுக்கு மேல் கடினமாக உழைத்ததால் தான் அவருக்கு அப்பவே அத்தனை ரசிகர்கள் என்பது பலருக்கு இன்னும் புரியவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான சிவகாத்திகேயன், ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகியுள்ள காக்கிசட்டை படத்தின் டிரைலரை 8 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட நபர்கள் இதுவரை பார்த்துள்ளனர். அதோடு அந்த டிரைலரில் சிவகார்த்திகேயன் தல அஜித் டயலாக் ஒன்றை பேசுவதால் அவருக்கு அஜித் ரசிகர்கள் ஆதரவை வாரி வழங்குகின்றனர்.
அதே சமயம் இதில் சிவகார்த்திகேயன் விஜய்யின் ஸ்டைலை காப்பியடித்துள்ளார் என்று விஜய் ரசிகர்கள் அவரை சமூக வலைத்தளங்களில் கிழித்தெடுத்துள்ளனர். இப்படி விஜய், அஜித் ரசிகர்கள் எதற்கு கெடுத்தாலும் சண்டை என்று இருப்பது அஜித், விஜய்யை அசிங்கபடுத்தும் விதமான செயல் என்று கோடம்பாக்கத்தில் கொந்தளிக்கின்றனர் பலர், இப்படி இவர்கள் அடித்து கொள்வது சிலருக்கு சாதகமாகவும் இருக்கிறது.
பக்கத்து வீட்டில அடுப்பு எரிஞ்சா…என்ன….புகைஞ்சா…என்ன. விஜய், அஜித் ரசிகர்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என கோடம்பாக்கத்தில் சிலர் குரல் கொடுக்கின்றனர்….அதுவும் சரி தான….
Comments
Post a Comment