பிப்ரவரியில் இசை.. மே மாதம் படம்.. விக்ரம் பட பிளான்!!!

24th of January 2015
சென்னை:ஒரு பக்கம் ‘ஐ’ படத்தின் வசூலாலும், இன்னொரு பக்கம் அதில் தனது நடிப்பிற்கு கிடைத்துவரும் தொடர் பாராட்டுக்களாலும் மகிழ்ச்சியில் இருக்கும் விக்ரம் அதை அப்படியே தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் தான் நடித்துவரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தின் ஈடுபாட்டில் வெளிப்படுத்தி வருகிறார்.

சமந்தா கதாநாயகியாக நடிக்க, பசுபதி, ஜாக்கி ஷெராப் முக்கியமான வேடங்களில் நடிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு 9௦ சதவீதம் முடிவடைந்துவிட்டது. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிப்ரவரியில் நடத்த முடிவு செய்துள்ளார்களாம். மேலும் படத்தையும் சம்மர் ரிலீஸாக ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிடவும் தீவிரம் காட்டிவருகிறார்களாம்.

Comments