விஜய்க்கு பீகே படம் பிடித்தால் ரீமேக் செய்யும் முயற்சியில் ஷங்கர்?!!!

1st of January 2015
சென்னை:படத்துக்குப் படம் வித்தியாசமான கதைகளை, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கும் அமீர்கானின் சமீபத்திய படம் - பீகே. சமீபத்தில் வெளியான பீகே ஹிந்தி திரைப்படம் உலகமெங்கும் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  

அண்மையில் பீகே படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர், அந்தப் படத்தை ட்விட்டரில் பாராட்டித்தள்ளி இருக்கிறார்.

பீகே படத்தில் அமைந்துள்ள யதார்த்தமான காமெடி காட்சிகளையும், அமீர்கானின் சிறந்த நடிப்பையும் பாராட்டிய ஷங்கர், தனக்கு பீகே படம் மிகவும் பிடித்திருக்கிறது என்றும் ட்விட்டரில் தனது கருத்தை தெரிவித்திருந்தார்.
 
சில வருடங்களுக்கு முன் அமீர்கான் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற 3 இடியட்ஸ் ஹிந்திப்படத்தை இயக்கியவர் ராஜ்குமார் இரானி. இவர்தான் தற்போது வெளியான பீகே படத்தையும் இயக்கியிருக்கிறார்.

ராஜ்குமார் இரானி இயக்கிய 3 இடியட்ஸ் படத்தை விஜய்யை வைத்து தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீ-மேக் செய்தார் இயக்குனர் ஷங்கர். இப்போது, பீகே படத்தைப்பார்த்து மிகவும் இம்ப்ரஸ்ஸான ஷங்கர் இந்தப்படத்தையும் தமிழில் ரீ-மேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் அடிபடுகிறது.
 
அதுமட்டுமல்ல, விஜய்க்கு போன் செய்த ஷங்கர் பீகே படத்தை பார்க்கும்படியும், அதை ரீமேக் செய்தால் நடிப்பீர்களா என்றும் கேட்டதாகவும் கேள்வி. விஜய்க்கு பீகே படம் பிடித்தால் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்குவாராம் ஷங்கர்.

Comments