1st of January 2015
சென்னை:மறைந்த திரைப்பட இயக்குனர் கே.பாலசந்தர் இல்லத்துக்கு நேரில் சென்று நடிகர் கமல்ஹாசன் ஆறுதல் கூறினார்.
இயக்குனர் கே.பாலசந்தர் மறைந்தபோது வெளிநாட்டில் இருந்ததால் கமல்ஹாசனால் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை.
இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து திரும்பிய நடிகர் கமலஹாசன், இன்று பாலசந்தரின் வீட்டிற்கு சென்று, அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், 'இளைஞர்கள் வியக்கும் அளவிற்கு திரைப்படம் எடுத்தவர். அவரின் 30 படங்கள் சரியில்லை என்று தூக்கி போட்டுவிட்டாலும், 70 படங்கள் பேசப்படும். அவை, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும். அவர் ஒரு சிருஷ்டி கர்த்தா. அவர் விட்டு சென்ற பணியை நான் மகனாக பின் தொடர்வேன்' என்றார்.
Comments
Post a Comment