20th of January 2015
சென்னை:Tags : Ammini Movie Pooja Photos, Ammini New Tamil Movie Launch images, Ammini Film Poojai Event Stills, Ammini Movie Launch Function Gallery, Ammini Movie Shooting Start Pictures.
பிரபல நடிகையாக தமிழ் சினிமாவில் வலம் வந்த லஷ்மி ராமகிருஷ்ணன், தற்போது இயக்குநராக ரொம்ப ஜோராக வலம் வருகிறார். ‘ஆரோகணம்’ என்ற படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த லஷ்மி ராமகிருஷ்ணன், இரண்டாவதாக ‘நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற படத்தை இயக்கினார். இந்த இரண்டு திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றிப் பெறவில்லை என்றாலும், தற்போது லஷ்மி ராமகிருஷ்ணனுக்கு மூன்றாவதாக படம் இயக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
அம்மிணி’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை டக் எண்டெர்யின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் வெண் கோவிந்தா தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் இன்று எளிமையாக நடைபெற்றது. படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்குகிறது.
‘அம்மிணி’ படம் குறித்து கூறிய லஷ்மி ராமகிருஷ்ணன், “நான் அண்மையில் சந்தித்த ஒரு அம்மணியை பற்றியக் கதை. அவரும்,அவரது வாழ்வு இலக்கியமும் என்னை மிகவும் கவர்ந்துள்ளது. வாழ்க்கை என்றால் என்ன என்பதை நாம் இன்னும் புரிந்துக் கொள்ளவில்லை, புரிந்துக் கொள்ள முயற்சிக்கவும் இல்லை. பொருள் ஆதாரத்தை தாண்டிய வாழ்கை ஒன்று உண்டு என்பதை நான் அவரிடம் தான் உணர்ந்தேன். இந்த யதார்த்தத்தை திரைப்படமாக சித்தரித்து இருக்கிறேன்.
இந்த கதாபாத்திரத்துடன் மேலும் பல சுவராசியமான கதாபாத்திரங்கள் மூலமும் சுவாரசியாமான சம்பவங்கள் மூலமாகவும் படத்துக்கு வலு சேர்த்து இருக்கிறேன். கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர், நடிகையர் தேர்வு நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் வெவ்வேறு துறைகளில் உள்ள வல்லுனர்களை தொழில் நுட்ப கலைஞர்களாக ஒப்பந்தம் செய்ய உள்ளோம். என் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் இருக்க வேண்டும் என விழைபவள் நான். இந்த படத்திலும் என் முத்திரை இருக்கும்.” என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment