யேசுதாஸ் 50 - லஷ்மன் ஸ்ருதி நடத்தும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!!!

13th of January 2015
சென்னை:தமிழ், மலையாளம் மட்டும் இன்றி, இந்திய மொழிகள் அனைத்திலும் பாடல்கள் பாடி தனது குரலுக்கு அடிமையாக்கியவர் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ்.

ஜனவரி 10ஆம் தேதி, தனது 75வது பிறந்தநாளை கொண்டாடிய ஜேசுதாஸ், திரைப்படத்துறையில் 50 ஆண்டுகளை கடந்து இன்னும், இளைய தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடிக்கொண்டு தான் இருக்கிறார்.


17 மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள ஜேசுதாசை கெளரவிக்கும் விதமாகவும், அவர் சினிமாவில் 50 ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் விதமாகவும் லஷ்மன் ஸ்ருதி இசைக் குழுவினர் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை எற்பாடு செய்துள்ளனர்.

வரும் ஜனவரி 25ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் தமிழ் மட்டும் இன்றி, இந்திய சினிமாவின் முன்னணி பாடகர்கள் பலரும் பாடுகிறார்கள். மேலும் முன்னணி நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கே.ஜே.ஜேசுதாசை கௌரவிக்க உள்ளது.

இந்த நிகழ்ச்சிக்கான அறிவிப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர்கள் தேவா, சங்கர் -கணேஷ், பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன், பின்னணி பாடகரும், ஜேசுதாசின் மகனுமான விஜய் ஜேசுதாஸ் ஆகியோர் கலந்துக்கொண்டு 'ஜேசுதாஸ் 50' இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை வெளியிட்டனர்.

இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்பட உள்ளது.

'ஜேசுதாஸ் 50' நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுகள், லஷ்மன் ஸ்ருதி மியூசிகல்ஸ் - வடபழநி /எம் 6 ஈவண்ட்ஸ் - சி.ஐ.டி நகர், நந்தி சிலை அருகில் / நாயுடு ஹால் – அனைத்து கிளைகள், ஆகிய இடங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி குறித்த மேலும் விபரங்கள் அறிய, 99419 22322, 98419 07711, 88070 44521, 044 – 4286 7778, ஆகிய கைபேசி மற்றும் தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Comments