4th of January 2015
சென்னை:மலையாளத்தில் மேஜர் ரவி டைரக்ஷனில் உருவாகும் படங்கள் அனைத்துமே ராணுவத்தை மையமாக வைத்து உருவாகும் அதிரடிப்படங்கள்தான். அந்த வகையில் ‘கீர்த்தி சக்ரா’(தமிழில் ’அரண்’), ‘குருசேத்ரா’, ‘காந்தகார்’ என அனைத்து படங்களுமே சூப்பர்ஹிட்டாக அமைந்தன.
தற்போது பிருத்விராஜை வைத்து மீண்டும் ராணுவ பின்னணியில் ‘பிக்கெட்-43’ என்ற படத்தை இயக்கியுள்ளார் மேஜர் ரவி. இதில் பிருத்விராஜுடன் மலையாள கதாசிரியரும் இயக்குனருமான ரெஞ்சி பணிக்கரும் இந்தி நடிகரான ஜாவேத் ஜப்ரியும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்கள்.
இந்தப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் நடைபெற்றுள்ளது. இந்தப்படத்தில் பாகாடி என்கிற ராணுவ நாயும் பிருத்விராஜுடன் இணைந்து நடித்துள்ளது. படத்தில் பிருத்விராஜ் வரும் பெரும்பாலான காட்சிகளில் இந்த நாய் நடித்துள்ளது.
ஆனால் ராணுவத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றிய இந்த நாய், துரதிர்ஷ்ட வசமாக கடந்த ஆகஸ்ட் மாதமே இறந்துவிட்டது. தமிழில் சிபிராஜ் நடித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் நடித்த ‘சுப்பிரமணி’ என்கிற நாய் எப்படி ரசிகர்களை கவர்ந்ததோ, அதேபோல இந்த பகாடியும் ரசிகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை.
Comments
Post a Comment