18th of January 2015
சென்னை:கேப்டன் சினி கிரியேஷன் தயாரிப்பில் உருவான பிசகாப்தம்பீ திரைப்படத்தின் ஆடியோ உரிமைத்தை கடும் போட்டிகளுக்கிடையே லகரி ஆடியோ நிறுவனம் 42 லட்சம் ரூபாய்க்கு பெற்றுள்ளது.
கேப்டன் சினி கிரியேஷன் எல்.கே.சுதீஷ் பெருமையுடன் வழங்கும், கேப்டன் விஜயகாந்தின் நல்லாசி பெற்ற அறிமுக நாயகன் சண்முகபாண்டியன் நடித்த பிசகாப்தம்பீ திரைப்படம் கடந்த சில மாதங்களாக சிங்கப்பூர் மலேசியா, பேங்காங் உள்ளிட்ட வெளிநாடுகளில் பிரம்மாண்டமான வகையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
தற்போது இந்த படத்தின் ஆடியோ உரிமையை பிகூலிக்காரன்பீ, பிஅண்ணாமலைபீ, பிரோஜாபீ, பிகாதலன்பீ, பிஜென்டில்மேன்பீ ஆகிய வெற்றிப் படங்களின் ஆடியோ உரிமையை பெற்றுள்ள லகரி ஆடியோ நிறுவனம், கடும் போட்டிகளுக்கிடையே இப்படத்தின் ஆடியோ உரிமையையும் 42 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இந்த லகரி ஆடியோ நிறுவனம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகில் முன்னணி நிறுவனமாகும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழகத்தில் பிசகாப்தம்பீ படத்தின் ஆடியோவை இந்நிறுவனம் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் இளைஞர்களை சுண்டி இழுக்கும் கார்த்திக்ராஜா ஜீவாவின் இசையில் நடிகர் சிம்பு, நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் நடிகை ஆண்டிரியா பாடிய பிஅடியே ரதியேபீ என்ற பாடல் நேற்று அதிகாலை யூ டியூபில் வெளியிட்டப்பட்டது.
பாடல் வெளியான சில மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இப்பாடலை கேட்டு ரசித்துள்ளனர்.
இந்தப் படத்திலிருந்து இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா தனது தாயின் பெயரை தன் பெயரோடு இணைத்து கார்த்திக்ராஜா ஜீவா என்று பெயர் மாற்றியுள்ளதும், இரண்டு நடிகைகள் இணைந்து பாடிய பாடல் இடம் பெற்ற படம் இது என்ற பெருமை பிசகாப்தம்பீ படத்திற்குக் கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
Comments
Post a Comment