13th of January 2015
சென்னை:திறமையுள்ள பல இளம் பாடகர்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும், விஜய் டிவியின் ‘சூப்பர் சிங்கர் ஜூனியர் 4’ நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கான சிறுவர், சிறுமிகள் கலந்துக்கொண்ட இந்த போட்டியில், பல்வேறு சுற்றுக்களுக்குப் பிறகு முதல் 3 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்பூர்த்தி, பரத், ஹரிபிரியா என்ற இந்த மூன்று பேர் தான் இறுதிச் சுற்றில் மோதும் ஜூனியர் சூப்பர் சிங்கர்கள். மேலும், மிக நுண்ணிய சில குறைகளால் போட்டியில் இருந்து விலக்கப்பட்ட சில குழந்தைகள், மீண்டும் தங்களுடைய திறமையை நிரூபிக்க, ஒயில்காட் சுற்றும் இதில் உண்டு. அதன்படி, ஒயில்காட் சுற்றுக்காக 8 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த 8 குழந்தைகள் பங்குபெறும் ஒயில்காட் சுற்று வரும் ஜனவரி 19ஆம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. இதில் நன்றாக பாடி தனது திறமையை நிரூபிக்கும் ஒரு குழந்தை இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவார்.
சூப்பர் சிங்கர் ஜுனியர் 4, போட்டியின் ஒயில்காட் சுற்று வரும் ஜனவரி 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது. இதில் பங்குபெறும் 8 போட்டியாளர்களில் ஒருவர் இறுதிப் போட்டிக்குள் நுழையும் வாய்ப்பை பெறுவர். அதற்கு நேயர்கள், யாருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்கிறார்களோ, அவரே இறுதிப் போட்டியில் பங்குபெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 4 இறுதிப் போட்டி, வரும் பிப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்பு செய்ய விஜய் டிவி முடிவு செய்துள்ளது.

Comments
Post a Comment