படம் 29ம் தேதி வருதுனு சொன்னீங்க….அது போன வாரம் இப்ப 5ம் தேதி!!!

23rd of January 2015
சென்னை:அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண்விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகிவரும் என்னை அறிந்தால் படம் வரும் 29ம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.
 
தற்போது அந்த தேதி மீண்டும் மீண்டும் மீண்டும் (ஏன்னா அத்தனை முறை தள்ளி போகுது படம்) தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அஜித் நடித்த எந்த படமும் இத்தனை முறை தள்ளி போய் இருக்காது, என்னை அறிந்தால் அப்படினு படத்துக்கு தலைப்பு வச்சதும் வச்சாங்க அவங்க என்ன பண்ணுறாங்கனு நம்ம அறிய முடியல….
 
இந்த முறை படம் தள்ளிப்போனதற்கு காரணம் இன்னும் சென்சார் போர்ட் படம் பார்க்கவில்லை என்பது தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இன்னும் படத்தின் எடிட்ங் வேலைகளை முடிக்காததால் தான் இந்த தாமதம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.
 
மொத்தத்தில் இன்று போய் நாளை வா என்பது போலும், வரும் ஆனா வராது என்று படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றிக்கொண்டே உள்ளனர்.

Comments