என்னை அறிந்தால்’ படம் ஜனவரி 21-ல் சென்சார்; ஜனவரி 29-ல் ரிலீஸ் உறுதி..!!!

18th of January 2015
சென்னை:இந்த ஜனவரி 15-ம் தேதியே ரிலீஸாகியிருக்க வேண்டிய ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் வரும் 29-ம் தேதி ரிலீஸாவது உறுதி என்று அதன் தயாரிப்பு நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
 
எடுக்கப்பட வேண்டிய சில காட்சிகளை அவசரமாக படமாக்கி அதனை எடிட் செய்து கடைசிகட்டமாக நகாசு வேலைகளையும் செய்து வருகிறது படக்குழு. 

வரும் 21-ம் தேதி ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் சென்சார் செய்யப்படவுள்ளது.
வரும் 29-ம் தேதி படம் ரிலீஸ் உறுதி என்பதையும் அதன் தயாரிப்பாளர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Comments