மீண்டும் கொக்கி குமாராக தனுஷ்; புதுப்பேட்டை படத்தின் 2 பாகம் இயக்கும் செல்வராகவன்!!!

29th of January 2015
சென்னை:தனுஷ் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படம் புதுப்பேட்டை. இப்படத்தை அவருடைய அண்ணன் செல்வராகவன் தான் இயக்கியிருந்தார்.

இதில் கொக்கி குமாராக தனுஷ் வாழ்ந்திருப்பார் என்று தான் சொல்ல வேண்டும், சில தினங்களுக்கு முன் புதுப்பேட்டை படத்தின் 2 பாகத்திற்கு யாராவது கதை ரெடி செய்யுங்கள் என்று டுவிட் செய்திருந்தார்.

எதற்கு யாராவது, நாமே பண்ணுவோம் என்று செல்வராகவனே இதற்கான வேலையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
விரைவில் இது குறித்து முழு தகவல்களும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Comments