அருள்நிதி படத்தில் 196௦கள் பாணியில் ஒரு பாடல்!!!

18th of January 2015
சென்னை:அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் ஸ்ரீகிருஷ்ணா இயக்கும்  
’நாலு போலிஸும் நல்லா இருந்த ஊரும்’ திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இந்தப்படத்திற்கு பி.ஆர். ரெஜின் என்பவர் இசையமைத்துள்ளார். குறிப்பாக ‘காதல் கனிரசம்’  என்ற பாடல் அதன் வித்தியாசமான இசையால் அனைவரையும் ஈர்த்துள்ளது.

காரணம் வைரபாரதி எழுதியுள்ள இந்த டூயட் பாடலில் பழைய பாடல்களில் வரும் வார்த்தைகளே உபயோகித்துள்ளதோடு பாடலின் ராப் பகுதியையும் அதே அறுபதுகளின் தொனியில் அமைத்துள்ளார் ரெஜின். “கனவு-டூயட் ஆக படத்தில் வரும் பாடலுக்கு அறுபதுகளில் வெளிவந்த பாடலை ரீமிக்ஸ் செய்யலாம் என்று சொன்னாராம் இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா.
 
அதெல்லாம் வேண்டாம், அதே பாணியில், அதே இனிமையுடன் நான் புதிதாக இசையமைத்து தருகிறேன்” என்று கூறி இந்தப்பாடலை கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ரெஜின். இதில் சுவராஸ்யம் என்னவென்றால் இந்தப்பாட்டிற்கு ரசிகர்கள் தங்கள் கற்பனையில் தோன்றும் நடன அசைவுகள் மற்றும் காட்சிகளை பதிவு செய்து, ஒரு நிமிடம் அல்லது அதற்கும் மேல் நீளமுள்ள வீடியோவாக அனுப்ப வேண்டும். தேர்ந்து எடுக்கப்படும் ரசிகர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.” என்கிறார் இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா.

Comments