வெள்ளக்கார துரை’க்கு கிடைத்தது ‘U’ சர்டிபிகேட்..! கிறிஸ்துமஸ் ரிலீஸ்!!!

17th of December 2014
சென்னை:துள்ளாத மனதையும் துள்ளவைக்கும் ஜால வித்தைக்காரர் இயக்குனர் எழில்.. தற்போது இவர் இயக்கியுள்ள ‘வெள்ளக்கார துரை’, வித்தியாசமான, அதேசமயம் காமெடிக்கு கியாரண்டி தரும் கதைக்களம்.. விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா என கலக்கல் காம்பினேஷன்.
 
காதல் ஜோடி ஸ்ரீதிவ்யா என்றால், முதன்முறையாக காமெடி ஏரியாவில் குதிக்கும் விக்ரம் பிரபுவுக்கு காமெடி ஜோடியாக நடிக்கிறார் சூரி. விக்ரம் பிரபுவின் முந்தைய படமான ‘சிகரம் தொடு’வில் சூப்பர்ஹிட் பாடல்களை தந்த டி.இமான் தான் இந்தப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார்.

இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு ‘U’ சர்டிபிகேட் கொடுத்துள்ளனர். வரும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டமாக வரும் டிச-25ஆம் தேதி ‘வெள்ளைக்கார துரை’ வெளியாகிறது.

Comments