லிங்காவுக்கு பயப்படாமல் ரிலீஸாகும் ‘யாரோ ஒருவன்!!!

7th of December 2014
சென்னை:மிகப்பெரிய நடிகர்கள், இயக்குனர்களின் படங்களே அடுத்த வாரம் சூப்பர்ஸ்டாரின் லிங்கா’ வெளியாவதால் தங்களது ரிலீஸ் தேதியை 15 நாட்கள் கழித்தோ அல்லது அட்லீஸ்ட் லிங்கா வெளியான அடுத்த வாரத்திற்கோ தள்ளி வைத்துள்ளன. ஆனால் ‘யாரோ ஒருவன்’ என்கிற சின்ன பட்ஜெட் படம் ஒன்றை துணிச்சலாக ‘லிங்கா’வுக்கு போட்டியாக.. இல்லையில்லை, லிங்காவுக்கு இணையாக ரிலீஸ் செய்கிறார்கள்.

டி,ராஜேந்தரைப்போல இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், இசை, ஒளிப்பதிவு, இயக்கம் என பல ஏரியாக்களை கையாண்டிருக்கிறார் மலையாள திரையுலகத்தை சேர்ந்த கே.என்.பி பைஜூ. காட்டுக்குள்ளே நடக்கும் த்ரில்லர் கதையாக இந்தப்படம் உருவாகியுள்ளது. கதாநாயகனாக ராம் என்பவர் நடித்துள்ளார்.

Comments