கருணாகரன் கேரக்டரை ஞாபகப்படுத்திய ரஜினி!!!

9th of December 2014
சென்னை:நேற்று கார்த்திக் சுப்புராஜ் முறை என்றால், இப்போது கருணாகரன் டர்ன்.. ஆம்.. சூப்பர்ஸ்டாரை சந்தித்த அனுபவங்கள் பற்றி ஒவ்வொருவராக இப்போதுதான் மனம் திறக்கிறார்கள். ‘லிங்கா’ படப்பிடிப்பின்போது கருணாகரனை அழைத்துச்சென்று ரஜினியிடம் கே.எஸ்.ரவிகுமார் அறிமுகப்படுத்திய போது, எல்லோரையும் போல ரஜினியை அருகில் பார்க்கும்போது ஏற்படும் பரவச நிலையில் தான் கருணாகரனும் இருந்தாராம்.

ஆனால் ரஜினி சார், சூது கவ்வும் படத்தில் என்னுடைய நடிப்பை பாராட்டி பேசியதுடன் அந்தப்படத்தில் நான் ஏற்று நடித்த அருமை பிரகாசம் என்னுடைய கேரக்டர் பெயரைக்கூட மறக்காமல் வைத்திருந்தார்.. இதைவிட எனக்கு வேறு என்ன பெரிய பரிசு கிடைத்துவிட முடியும்” என பார்ப்போரிடம் எல்லாம் ரஜினி புகழ் பாடிக்கொண்டு இருக்கிறார் கருணாகரன்.

Comments