ரஜினிகாந்த் குடும்பம் வாட்ச் லிங்கா படம்!!!

16th of December 2014
சென்னை:கே . எஸ் .ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான லிங்கா படம் டிசம்பர் 12 ஆம் தேதி வெளியானது.

உலகமெங்கும் 3000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகி இருக்கும் இப்படத்துக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது, சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் லதா ரஜினிகாந்த் , சௌந்தர்யா , ஐஸ்வர்யா , தனுஷ் , அனிருத் என ரஜினி குடும்பத்தினர்களே ரசிகர்களோடு ரசிகர்களாய் அமர்ந்து லிங்கா படத்தை மகிழ்ச்சியோடு பார்த்தனர்,

இது குறித்து ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா கூறியதாவது , “டிசம்பர் 12 ஆம் தேதி என்பது எங்களுக்கு ரொம்ப முக்கியமான நாள் எங்கள் அப்பா ரஜினியின் பிறந்த நாள் மட்டுமில்லாது அப்பாவை நீண்ட இடை வெளிக்கு பிறகு வெள்ளித்திரையில் பார்ப்பது எங்களுக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது ரசிகர்களின் உற்சாகத்தை வர்ணிக்க வார்த்தையே இல்லை” என்று மகிழ்ச்சியோடு கூறியுள்ளார் .
 

Comments