29th of December 2014
சென்னை:'என்னை அறிந்தால்' படக்குழு எவ்வித விழாவும் இன்றி இசையை வெளியிடுவதால், அஜித் ரசிகர்கள் சென்னை மற்றும் கோவையில் இசை வெளியீட்டு விழா நடத்த தீர்மானித்திருக்கிறார்கள்.
கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'என்னை அறிந்தால்' படத்தின் இசை ஜனவரி1-ம் தேதி வெளியாகிறது. படத்தை பொங்கல் அன்று வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள்.
அஜித் படம் என்றாலே இசை வெளியீட்டு விழா என எவ்வித விழாவும் நடைபெறாது. அஜித்தும் தன் படத்தை விளம்பரப்படுத்தும் பணி செய்ய முன்வர மாட்டார்.
ஜனவரி 1-ம் தேதி நேரடியாக கடைகளில் இசை கிடைக்கும் என்று படக்குழு அறிவித்ததைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவை கொண்டாட்டமாக நடத்த தீர்மானித்திருக்கிறார்கள்.
சென்னையில் ரிச்சி ஸ்ட்ரீட்டில் ஜனவரி 1-ம் தேதி காலை 10 மணிக்கு இந்த கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. சென்னை மட்டுமன்றி கோவையிலும் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு திருவிழா நடத்த இருக்கிறார்கள்.
Comments
Post a Comment