9th of December 2014
சென்னை:சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா..? வராது இல்லையா.. என்னதான் சிங்கப்பூர், மலேசியா என எங்கோ பறந்து பறந்து சென்று இசை நிகழ்ச்சிகள் நடத்துவதை காட்டிலும் நம் மண்ணில் நடத்த வேண்டும் என்று எண்ணிய யுவன் சங்கர் ராஜா வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு நெல்லையில் இசைத்திருவிழா நடத்த இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கு ”யுவன் மியூசிகல் எக்ஸ்பிரஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியாக இசைஞானி இளையராஜாவும் கலந்து கொள்கிறார். கிரீன் திரீஸ் சொல்யூஷன்ஸ் மற்றும் ஜெனி இன்போடயின்மென்ட் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியின் பர்ஸ்ட் லுக் நேற்று முன் தினம் சமுக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சி ஜனவரி-17ஆம் தேதி பாளையங்கோட்டையிலுள்ள பெல்பின்ஸ் திடலில் நடைபெற உள்ளது. சரி.. அது ஏன் குறிப்பாக நெல்லை என்றால், “எனது முதல் படமான அரவிந்தன் இங்குதான் படமாக்கப்பட்டது. அதனால்தான் நான் நெல்லையை தேர்ந்து எடுத்தேன்” என்கிறார் யுவன். எங்கு நடத்தினால் என்ன, எல்லாம் நம்ம ஊரு தானே..!
Comments
Post a Comment