லிங்குசாமி இயக்கத்தில் விஷால்!!!

2nd of December 2014சென்னை::லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ‘ஆம்பள’ படத்தில் நடித்து வரும் விஷால், இப்படத்திற்குப் பிறகு சுசீந்திரன் இயகக்த்தில் நடிக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பின் போதே, லிங்குசாமி இயக்கும் படம் ஒன்றிலும் விஷால் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த ‘சண்டைக்கோழி’ படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. அப்படம் வெளியாகி 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் லிங்குசாமி-விஷால் இணைய இருக்கிறர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இப்படத்திற்கான பேச்சு வார்த்தை தொடங்கியுள்ள நிலையில், படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷாலின், ஆம்பள படம் ரிலீஸிற்குப் பிறகு அறிவிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Comments