ஜோதிகாவின் தோழியானார் விருமாண்டி நாயகி!!!

5th of December 2014
சென்னை:மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்தின் ரீமேக்கில் நடிப்பதன் மூலம் திருமணமான பின், மீண்டும் முதன் முதலாக தன் நல்வரவை தமிழ்சினிமாவிற்கு தந்திருக்கிறார் ஜோதிகா. ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கும் இந்தப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரிக்கிறது.

மலையாளத்தில் மஞ்சு வாரியார் ஏற்று நடித்த இந்த கதாபாத்திரத்திற்கு தோழியாக நடித்திருந்தவர் ஆட்டோகிராப், வரலாறு படங்களில் நடித்த கனிகா தான். வாழ்வில் பிடிமானம் இழந்து நிற்கும் தனது தோழிக்கு தன்னம்பிக்கை ஊட்டி, அவரை வெற்றிப்படிகளில் ஏற்றிவிடும் ஏணி போன்ற கேரக்டர் கனிகாவுடையது..

அதேபோல தமிழில் ஜோதிகாவுக்கு தோழியாக நடிப்பவர் அபிராமி… கமலுடன் விருமாண்டி படத்தில் ஜோடியாக நடித்தாரே அந்த அபிராமி தான். சொல்லப்போனால் ஜோதிகாவைப்போல அபிராமிக்கும் கூட பத்து வருடம் கழித்து தமிழில் எண்ட்ரி கொடுக்கும் நல்ல படமாக இது அமைந்திருப்பதும் ஆச்சர்யமான ஒற்றுமை.

Comments