இன்னும் பத்து எண்ணி முடிக்கலை… ஆனா விஜய் மில்டன் – விக்ரம் கூட்டணி ரிப்பீட்டு!!!

5th of December 2014
சென்னை:விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படம் இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பு முடிவடைந்து விடும். அந்த அளவுக்கு விறுவிறுப்பாக நடக்கிறது படப்பிடிப்பு.. இதற்கிடையே விக்ரமிடம் இன்னொரு கதையை சொல்லி அசத்தியிருக்கிறார் விஜய் மில்டன்..
ஏற்கனவே ஷூட்டிங் ஸ்பாட்டில் மில்டனின் படமாகும் வேகத்தை பார்த்து மிரண்டு போயிருக்கும் விக்ரம் தனது அடுத்த படத்தையும் விஜய் மில்டன் இயக்கத்தில் தான் நடிக்கிறார். தற்போது நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொண்டு பிப்ரவரியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

Comments