இடம் பொருள் ஏவல்’ பாடல் லீக் ஆனதில் சீனுராமசாமி அதிர்ச்சி!!!

15th of December 2014
சென்னை:தேசியவிருது பெற்ற இயக்குனரான சீனுராமசாமி தற்போது தனது நான்காவது படமாக ‘இடம்பொருள் ஏவல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தமுறை இசைக்காக சீனுராமசாமி கைகோர்த்திருப்பது யுவன் சங்கர் ராஜாவுடன். அதை விட சுவாரஸ்யமான விஷயம் யுவன் இசையில் வைரமுத்து முதன்முதலாக பாடல் எழுதியிருப்பது தான்.

இந்தப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து,தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. படத்தின் இசை வெளியீட்டை வரும் டிச-18ஆம் தேதி நடத்தலாம் என படக்குழுவினர் தீர்மானித்திருந்த வேளையில் படத்தின் பாடல்கள் இணையதளத்தில் லீக்காகின..


இதனை பலர் டவுன்லோடு செய்து கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.. இது திருப்பதி பிரதர்சையும் சீனு ராமசாமியையையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.. “உழுதவன் கணக்கு பார்த்தால் உலக்கு கூட மிஞ்சாது.. ஆனால் எங்களுக்கு நிலமும் கூட மிஞ்சாது.. இந்த தொழில் தான் பாதுகாப்பற்ற தன்மை உள்ளது. ஆனால் இதை தடுக்கவேண்டியவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள்” என தனது ஆதங்கத்தை பதிவு செய்திருக்கிறார் சீனுராமசாமி.

Comments