15th of December 2014
சென்னை:தனுஷ் நடித்த ‘3’ படத்தில் ‘போ நீ போ’ பாடலை பாடியதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் பிரபல இந்திப்பாடகர் மோஹித் சவ்ஹான். மீண்டும் இப்போது பிரசாந்த் நடிக்கும் ‘சாஹசம்’ படத்தில் தமன் இசையில் நா.முத்துக்குமார் எழுதிய ‘ஆங்க்ரிபேர்ட் பெண்ணே’ என்கிற பாடலை பாடியுள்ளார்.. புதியவரான அருண்ராஜ் வர்மா இந்தப்படத்தை இயக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
மோஹித் சவ்ஹானை பற்றி நடிகர் தியாகராஜன் கூறுகையில், “மிக அருமையான குரல் வளமிக்க மோஹித் சவ்ஹான் இசையில் மட்டுமல்ல பழகுவதற்கும் இனிமையான மனிதர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய பாடலை கேட்ட நாள் முதல் பிரசாந்தின் ‘சாஹசம்’ படத்தில் இவரை பாட வைக்க வேண்டுமென நினைத்தேன். மிகச்சிறப்பாக வந்துள்ள ஆங்கிரி பேர்ட் பெண்ணே பாடலை இளம் காதலர்களுகாக டெடிக்கேட் செய்கிறேன்” என்கிறார்.
Comments
Post a Comment