19th of December 2014
சென்னை:சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் , ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன் , ஸ்ரீதேவி, சுதீப் நடிக்கும் படத்திற்கு இப்போது வரை இன்னும் பெயரிடப்படவில்லை.
முதலில் சிம்புதேவன் தனுஷை வைத்து இயக்குவதாக இருந்த படத்தின் தலைப்பு ‘மாரீசன்’ எனவும் அந்த பெயர்தான் இந்தப் படத்துக்கு வைக்கப்படலாம் எனவும் சொல்லப்பட்டது.
பிறகு, ‘ கருடா’ என்ற டைட்டில் பரிசீலிக்கப்பட்டதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால், அதுவும் உண்மை இல்லையாம். தற்போது ’மருதீரன்’ என்ற டைட்டில் வைக்க ஆலோசித்து வருகிறார்களாம்.
எனினும் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் இன்னும் வரவில்லை.
Comments
Post a Comment