11th of December 2014
சென்னை:ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகியுள்ள ‘லிங்கா’ டிசம்பர் 12ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. டிக்கெட் முன்பதிவும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ரஜினிகாந்தின் ரசிகர்கள் லிங்கா ரிலீஸ் மற்றும் அவருடைய பிறந்தநாள் என இரண்டும் ஒரே நாள் என்பதால், இதனை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதன்படி கோயில்களில் சிறப்பு வழிபாடு, திரையரங்கங்கலில் ராட்சத பேனர்கள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில், ரஜினியின் மருமகனும் பிரபல நடிகருமான தனுஷ், லிங்கா படத்தின் ரிலீசை கொண்டாடுவதற்காக, தற்போது தான் நடிக்கும் ‘மாரி’ படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்துள்ளார். இதற்காக, அப்படத்தின் இயக்குநர் பாலாஜி மோகனிடம், தான் இரண்டு நாட்கள் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள மாட்டேன் என்று கூறி, அதற்காக விடுமுறை கடிதத்தையும் கொடுத்துவிட்டாராம். இதை தனுஷே தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment