மாஸ் படத்தில் சூரியாவுக்கு மகளாக யுவினா பார்வதி!!!

4th of December 2014
சென்னை:அஜித் , தமன்னா நடித்த வீரம் படத்தில் ‘யுவினா’ என்ற 5 வயது குழந்தை நட்சத்திரம் நடித்துயிருந்தார், யுவினாவின் செல்லதனமான நடிப்பு சில இயக்குனர்களை கவர்ந்தது , வீரம் படத்தை அடுத்து மஞ்சப்பை , அதிதி . கத்தி , ஜெய்ஹிந்த் 2 , ஆகியபடங்களில் நடித்துயிருந்தார்.

ஜெய்ஹிந்த் 2-வில் அர்ஜுனுக்கு மகளாக நடித்து இருந்தார், அர்ஜுன் மகளாக நடித்த யுவி , தற்போது மாஸ் படத்தில் சூர்யாவின் மகளாக நடித்து வருகிறார். யுவினா சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் காக்கி சட்டை படத்திலும் நடித்து இருக்கிறார் .

Comments