கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளிவரும் வெள்ளைக்கார துரை

3rd of December 2014
சென்னை:இயக்குனர் எழில் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து வரும் படம் ‘வெள்ளைக்கார துரை’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். காமெடி வேடத்தில் சூரி நடிக்கிறார். டி.இமான் படத்திற்கு இசையமைக்கிறார்.

விறுவிறுப்பாக உருவாகி வரும் இப்படத்தின் பாடல்களை வரும் டிசம்பர் 10-ந் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். மேலும், படத்தை கிருஸ்துமஸ் தினத்தன்று வெளியிடவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இப்படத்தின் படப்பிடிப்பை கொடைக்கானல், பாண்டிச்சேரி, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் படமாக்கியுள்ளனர். காமெடி மற்றும் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக அன்புச்செழியன் தயாரித்துள்ளார்.

Comments