16th of December 2014
சென்னை::இளம் ஹீரோயின்கள் போட்டிக் களத்தில் சமந்தாவும் சரிபோட்டி தந்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் கைவசம் படங்கள் என்று பார்த்தால் தமிழில் விக்ரமுடன் நடிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ளே', தெலுங்கில் திரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் அல்லு அர்ஜுனுடன் நடிக்கும் படம் என 2 படங்கள் மட்டுமே உள்ளன.
சமீபத்தில் அவர் நடித்து ரிலீஸ் ஆன சில படங்கள் ஹிட்டாக அமையவில்லை. இதனால் அவரை ஒப்பந்தம் செய்வதற்கு முன் தயாரிப்பாளர்கள் 2 முறை யோசிக்கின்றனர் என ஒரு தரப்பு கூறினாலும் சீக்கிரமே கல்யாணம் செய்துகொண்டு செட்டிலாகும் எண்ணத்தில் இருப்பதால்தான் சமந்தா புது படங்களை அதிகம் ஒப்புக்கொள்ள மறுத்துவிடுகிறார் என்று மற்றொரு தரப்பு தெரிவிக்கிறது.
இதற்கிடையில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பெங்களூர் டேஸ்' படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறாராம். இதில் ஹீரோவாக அவரது பாய் பிரண்ட் சித்தார்த் நடிக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு படத்தில் இணையும் இந்த ஜோடி புத்தாண்டின் பரபரப்புக்கு இப்போதே தயாராகிவிட்டதாக முணுமுணுக்கிறார்கள். இதற்கிடையே இந்த ஜோடி பிரிந்துவிட்டதாக ஒரு தரப்பும் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வருவதாக இன்னொரு தரப்பும் கூறுகிறது. வஞிரைவிலே ரகசியம் கசியும் என காத்திருக்கிறது கோடம்பாக்க வட்டாராம்
Comments
Post a Comment