9th of December 2014
சென்னை:சில பிரபலங்களின் சந்திப்புகள் பெரும்பாலும் அவர்களுக்குள்ளேயே ரகசியமாக வைக்கப்பட்டு விடும். ஒரு சில, கொஞ்ச நாட்கள் கழித்து அவர்களாலேயே ஏதோ ஒரு தருணத்தில் சொல்லப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் ரசிகர்களை ஆச்சர்யத்தில் வாய்பிளக்க செய்துவிடும்.
அதே போன்றதொரு சந்திப்பைத்தான் நம்ம சூப்பர்ஸ்டாருடன் நிகழ்த்தியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இப்போதல்ல… லிங்கா படப்பிடிப்பு சிமோகாவில் நடந்ததே, அப்போது. இந்த சந்திப்பிற்கு உதவியவர்கள் கே.எஸ்.ரவிகுமாரும் நகைச்சுவை நடிகர் கருணாகரனும் தான்.
ரஜினியுடன் ஷூட்டிங்ஸ்பாட்டில் இரண்டு மணி நேரம் செலவு செய்ததை தனது வாழ்கையின் பொன்னான தருணம் என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ள சுப்புராஜ், “கிரேட் தலைவா.. இது போதும் தலைவா.. டிச-12ஆம் தேதிக்காக காத்திருக்கிறேன்” என புளகாங்கிதம் அடைந்துள்ளார். இந்த சந்திப்பின்போது சுப்புராஜின் ‘ஜிகர்தண்டா’வை பாராட்டிய ரஜினி சிம்ஹாவின் சேது கேரக்டர் தனக்கு 16 வயதினிலே ‘பரட்டை’யை ஞாபகப்படுத்தியது எனவும் புகழ்ந்துள்ளார்.
Comments
Post a Comment