11th of December 2014
சென்னை:அலோன் என்ற இந்தி படத்தில் நடிகை பிபாஷா பாசு பேயாக வந்து மிரட்ட உள்ளார்.
சென்னை:அலோன் என்ற இந்தி படத்தில் நடிகை பிபாஷா பாசு பேயாக வந்து மிரட்ட உள்ளார்.
2007ம் ஆண்டு தாய்லாந்தில் அலோன் என்ற பெயரில் பேய் படம் ஒன்று வெளியானது.
அந்த படம் தாய்லாந்து தவிர உலக அளவிலும் வசூலை அள்ளிக் குவித்தது.
அந்த படத்தை தற்போது அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்துள்ளனர். படத்தில் பிபாஷா பாசு ஒட்டிப் பிறந்த இரட்டையராக வருகிறார்.
அவர் பேயாக வந்து ரசிகர்களை மிரட்ட உள்ளார். இந்த படம் மூலம் சின்னத்திரை நடிகர் கரண் சிங் க்ரோவர் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.
பாலிவுட் படத்தில் சிக்ஸ் பேக் இல்லாமலா? பேய் படமானாலும் இதிலும் கரண் சிக்ஸ் பேக்ஸோடு தான் வலம் வருகிறார்.
ஒட்டிப் பிறந்த இரட்டையரில் ஒருவர் இறந்து மற்றொருவர் மூலம் பழி வாங்க துடிப்பதே கதை ஆகும். இந்த படம் வரும் ஜனவரி மாதம் 16ம் திகதி ரிலீஸ் ஆகிறது.
படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிபாஷா அசத்தலாகவும், மிரட்டலாகவும் உள்ளார்.
பூஷன் பட்டேல் இயக்கியுள்ள படத்தை பனோரமா ஸ்டுடியோஸ் என்ற பேனரில் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக், பிரதீப் அகர்வால் மற்றும் ஆன்டிஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
பூஷன் பட்டேல் முன்னதாக ராகினி எம்.எம்.எஸ்.2, 1920 ஈவில் ரிட்டர்ன்ஸ் ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர்.
Comments
Post a Comment