28th of December 2014
சென்னை:நீதானே என் பொன் வசந்தம் படத்தில் ஜீவா-சமந்தா ஜோடியை விட ரசிகர்களை அதிகம் கவர்ந்தது சந்தானம்-வித்யுலேகா ராமன் ஜோடி தான். இவர்கள் இருவரின் காதல் எபிசோட் ஒரு காமெடி ஹைக்கூ.. இதைத்தொடர்ந்து ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘வீரம்’ ஆகிய படங்களிலும் சந்தானத்தின் ஜோடியாக் நடித்திருந்தார் வித்யுலேகா.
தற்போது ‘பஞ்சுமிட்டாய்’, ‘காக்கிசட்டை’ ஆகிய படங்களில் நடித்துவரும் வித்யுவிற்கு, சர்ப்ரைஸ் கிப்ட்டாக சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 58-வது படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏற்கனவே விஜய்யுடன் ‘ஜில்லா’ படத்திலும் நடித்திருக்கிறார் வித்யுலேகா.
சொல்லப்போனால் இந்த வருட பொங்கல் ட்ரீட்டே இவருக்குத்தான் என்று சொல்வது போல தல-தளபதியுடன் ‘ஜில்லா’, ‘வீரம்’ என இவர் நடித்திருந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Comments
Post a Comment