28th of December 2014
சென்னை:ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஷங்கர் டைரக்ஷனில் விக்ரம், எமி ஜாக்சன் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 180 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி இருக்கிறது ‘ஐ’ படம்.. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை கடந்த செப்டம்பர்-15ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடத்தினார்கள்.
‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள, ஹாலிவுட்டின் அதிரடி மன்னனும் கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான அர்னால்ட் வந்து சென்று படக்குழுவினரை கௌரவப்படுத்தினார். அப்போதே ஆசிய சூப்பர்ஸ்டார் ஜாக்கிசானும் வருவார் என எதிர்பார்க்கப்பட்டு அது பொய்த்து போனது.
அதனால் என்ன, இதோ வரும் டிச-3௦ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெறவிருக்கும் ‘ஐ’ படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவிற்கு ஜாக்கிசான் வருகை தர இருக்கிறார். தசாவதாரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த பின்னர் ஜாக்கிசான் மீண்டும் இப்போதுதான் இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment