9th of December 2014
சென்னை:தென்னிந்திய நடிகைகளுக்கு எப்பவுமே பாலிவுட் மார்க்கெட் மீது ஒரு கண் இருக்கும். சான்ஸ் கிடைத்தால் உள்ளே நுழைந்துவிடுவதில் கில்லாடிகள். அப்படித்தான் அசின் முதல் இலியானாவரை என்டராகி ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். எனக்கொன்னும் அப்படியெல்லாம் ஆசை கிடையாதுன்னு நயன்தாராவும், அனுஷ¢காவும் ஜகா வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கோலிவுட், டோலிவுட்டில் கோல் போட்டு கலக்கத் தொடங்கி இருக்கும் சமந்தா பாலிவுட் மீது ஒரு கண் வைத்திருக்கிறார். இதுவரை தென்னிந்திய நடிகைகள் என்றாலே ஓரம்கட்டி வந்த கூல்டிரிங்ஸ் கம்பெனி ஒன்று திடீரென்று அதில் நடித்துக்கொண்டிருந்த பாலிவுட் டாப் ஹீரோயின் கேத்ரினா கைப்புக்கு டாக்கா கொடுத்துவிட்டு சமந்தாவை ஒப்பந்தம் செய்துவிட்டது. இதுதான் சரியான நேரம் என்று பாலிவுட்டில் மேனேஜரை தேடத் தொடங்கி இருக்கிறார் அம்மணி.
கூல்டிரிங்ஸ் பிடித்த கையோடு பாலிவுட் ஹீரோக்களின் கரம் கிடைத்தால் அதையும் இறுகப்பிடிக்க சமயம் பார்த்துக்கொண்டிருக்கிறார். அது சரி பாய்பிரண்ட் சித்தார்த் காதல் என்ன ஆனது என்று கேட்டால் அதெல்லாம் பிரேக்அப் ஆகி ரொம்ப நாளாச்சின்னு போகிற போக்கில் குண்டுபோட்டுவிட்டு செல்கிறது சமந்தா தரப்பு.
Comments
Post a Comment